30th of August 2013
சென்னை::கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம்.
விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட படம் ‘கற்றது தமிழ்’. ஜீவா, அறிமுகமான அஞ்சலி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் ராம் ஆகியோருக்கு சிறந்த பெயரை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இந்த படத்திற்கு உண்டு.
அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராம் இயக்கியிருக்கும் ‘தங்க மீன்கள்’ இன்று வெளியாகிறது.
இந்த படத்தையடுத்து ராம் இயக்கப் போகும் புதிய படம் ‘
தரமணி’. ஆன்ட்ரியா, வசந்த ரவி ஆகியோர் நாயகி, நாயகனாக நடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் ’காதல்” என்ற வாக்கியத்துடன் இப்படம் இன்று விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
‘தரமணி’ தரமான படமாக அமையட்டும் ராம்….
Comments
Post a Comment