13th of August 2013
சென்னை::காதல் விஷயத்தில் ஹன்சிகா எச்சரிக்கையாக இருந்தால் நீண்டநாள் சினிமாவில் நீடிக்க முடியும் என்று அட்வைஸ் வழங்கி இருக்கிறார் சிம்ரன்.
ஹன்சிகா மோத்வானி தற்போது சிம்பு ஜோடியாக வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் காதல் ஜோடிகளாக இணைந்த சிம்புவும் ஹன்சிகாவும் நிஜ வாழ்விலும் காதலர்களாகிவிட்டனர். சமீபத்தில் தனது 22வது பிறந்த நாளை கொண்டாடினார் ஹன்சிகா. அவருக்கு காதலன் சிம்பு பிறந்த நாள் பரிசாக இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வசனம் பொறித்த கேக் பரிசளித்தார். தங்கை இலக்கியாவுக்கு திருமணம் முடிந்தபிறகே ஹன்சிகாவுடன் தனது திருமணம் நடக்கும் என்று சிம்பு ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். ஆனால் ஹன்சிகாவோ 5 வருடத்துக்கு பிறகுதான் திருமணம் என கூறி இருக்கிறார். இருந்தாலும் சிம்புவும் ஹன்சிகாவும் ஆழமான காதலில் விழுந்துள்ளனர்.
இதற்கிடையில் ஹன்சிகாவுக்கு தோழியாகி இருக்கும் மாஜி ஹீரோயின் சிம்ரன் சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுபற்றி அட்வைஸ் தருகிறாராம். சினிமாவில் நீண்ட நாள் பயணிக்கும் வாய்ப்பு இருப்பதுடன் முன்னணி இடத்தையும் பிடிக்க முடியும் என்று ஹன்சிகாவுக்கு ஆலோசனை தந்திருக்கும் சிம்ரன், எந்தவொரு காரணத்துக்காகவும் நடிப்பதை விட்டுவிடாதே. அத்துடன் காதல் விஷயத்தில் எச்சரிக்கையாக இரு. அப்போதுதான் உன்னால் சினிமாவில் நீண்ட காலம் நீடிக்க முடியும் என்றும் அட்வைஸ் தந்திருக்கிறார்.

Comments
Post a Comment