26th of August 2013
சென்னை::இதற்கிடையில் வருடக்கணக்கில் முடிவடையாமல் இருந்த ‘வாலு பட ஷூட்டிங் முடிவடைந்தது. 50 சதவீதம் மட்டுமே முடிந்திருக்கும் ‘வேட்டை மன்னன் ஷூட்டிங்கையும் விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள், காதல் காட்சிகள் ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக சிம்பு, ஹன்சிகா ஜோடி ஜப்பான் செல்கிறது. படத்துக்காக லவ் டூயட் முடிந்ததும் இருவரும் ஜோடியாக அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க எண்ணி உள்ளனர்.
சிம்பு, ஹன்சிகா லவ் ஜோடி ரொமான்ஸ் செய்வதற்காக விரைவில் ஜப்பான் பறக்கிறது.‘வாலு, ‘வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர் சிம்பு, ஹன்சிகா. படத்தில் காதலர்களாக ஜோடி சேர்ந்த இவர்கள் நிஜத்தில் காதல் ஜோடிகளாக இணைந்து விட்டனர். இருவரும் தங்கள் காதலை சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தனர். தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பிறகு ஹன்சிகா, சிம்பு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment