27th of August 2013
சென்னை::சல்மான்கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அறிவித்திருக்கிறார் ஹன்சிகா. வாலு, வேட்டை மன்னன், மான் கராத்தே உள்ளிட்ட தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரோ விரைவில் சிம்புவுடன் ஷூட்டிங்கிற்காக ஜப்பான் செல்ல கால்ஷீட் தந்திருக்கிறார். மாதக்கணக்கில் கண்ணாடி அறையில் அடைந்து இருக்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானதும் ஹன்சிகாவிடம் அவர் நடிக்கும் படங்களின் இயக்குனர்கள் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள்.
அந்நிகழ்ச்சிக்கு போய்விட்டால் ஷூட்டிங் தடைபடும் என்ற பயத்தால் ஹன்சிகாவிடம் போன்செய்து அவர் தந்த கால்ஷீட்டை உறுதி செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதையறிந்து ஷாக் ஆன ஹன்சிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. நான் அதில் பங்கேற்க சென்றால் நான் நடிக்க வேண்டிய படத்தையெல்லாம் யார் முடிப்பது? இந்தநிகழ்ச்சியை நேரம் கிடைக்கும்போது டிவியில் பார்ப்பேன். இதைத்தவிர அதில் பங்கேற்கும் எண்ணம் எதுவும் இல்லை என டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
Comments
Post a Comment