கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

29th of August 2013
சென்னை::மூன்று படங்கள்: அட்டகத்தியில் யதார்த்த நாயகியாக வந்த நந்திதா பெயர் வந்தளவுக்கு படங்கள் வரவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தார். ‘எதிர் நீச்சல் படத்தில் விளை யாட்டு வீராங்கனையாக நடித்தார். இ
 
தன் பிறகு தற்போது ‘நளனும் நந்தினியும்‘, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ‘முண்டாசுபட்டி என 3 படங்களில் நடித்து வருகிறார்.
-----------------------------------------------------------------
 
தூக்கம் தொலைத்த பிரியாபிரியா ஆனந்த் கடந்த 1 மாதமாக தூங்கவே இல்லையாம். காரணம், விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் ‘அரிமா நம்பி ஷூட்டிங் ஒரு மாதமாக இரவில்தான் நடந்ததாம். இதில் பங்கேற்றதால் தூக்கம் போச்சாம். அடுத்து ரிலாக்ஸாக அதர்வாவுடன் ‘இரும்பு குதிரை படத்துக்காக புதுச்சேரியில் முகாமிடப்போகிறாராம்.
 
-----------------------------------------------------------------
 
டப்பிங் தொடங்கியது‘கோச்சடையான் படத்திற்கு ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசி முடித்தார்கள். 3டி தொழில்நுட்ப பணியில் பம்பரமாக சுழன்றுக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா. தெலுங்கில் ‘விக்ரமசிம்மா என்று இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் டப்பிங் பணி நேற்று முன்தினம்தான் தொடங்கியதாம்.
 
---------------------------------------------------------------
 
விசுவாச மாதவிசிவ கார்த்திகேயன் நடிக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் பிந்து மாதவி. எப்படி கவுரவ வேடத்துக்கு ஒப்புக்கொண்டார் என்று சிலர் மண்டையை குழப்பிக்கொள்கின்றனர். நிறைய படங்களில் கெஸ்ட் ரோல் வந்தும் ஏற்காத பிந்து மாதவி இப்படத்தில் நடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர்தானாம். தனது திரையுலக வாழ்க்கையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என்ற 2 படத்தை தயாரித்த நிறுவனம் இப்படத்தையும் தயாரிப்பதால் அவருக்கு நன்றி விசுவாசம் காட்டவே கெஸ்ட்டாக நடித்தாராம். -
-----------------------------------------------------------------------
 
பாலிவுட் போகும் நிகிதாஅசின், காஜல் உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகைகள், பாலிவுட்டில் என்ட்ரி ஆகி, வட நாட்டு ஹீரோயின்களுடன் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் கார்த்தி நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்த நிகிதாவும் பாலிவுட்டில் நுழைகிறார். மலையாளத்தில் வெளியான ‘டிராபிக்’, தமிழில் சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் வெளியானது. இப்படம் இந்தியில் தயாராகிறது. இதில் நிகிதா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்
 
...................................................................................................
 
பொதுமேடையில் கம்போசிங்காதுக்கினிய பாடல்களை உருவாக்கி தந்த இளையராஜா, தனது மியூசிக் கம்போசிங் பணியை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள சிறிய அறைக்குள் செய்வது வழக்கம். முதன்முறையாக மக்கள் முன்னிலையில் மேடையில் ஒரு படத்துக்கு இசை கம்போஸ் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற இப்படத்தில் கவிஞர் சினேகன் நடிக்கிறார். இவருடன் சினேகா, புதுமுகம் நாட்டியா நடிக்கின்றனர். அடுத்த மாதம் 11ம் தேதி கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பாடல் கம்போசிங் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினமே பட தொடக்க விழாவும் நடக்க உள்ளது.
 
-------------------------------------------------------------------------
 
நட்சத்திர டூர்சிவகார்த்திகேயன், சத்யராஜ் நடிக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்காக மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். இதற்காக நட்சத்திரங்கள் டூர் அடிக்க முடிவு செய்துள்ளனர். ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்களின் படங்களுக்கு சிட்டி மற்றும் மீடியாக்களில் மட்டும் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ‘ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்களின் படங்களுக்கு மட்டும் இந்த பாணி கைகொடுக்கிறது. அப்படி இல்லாத படங்களுக்கு எல்லா ஊரிலும் புரமோஷன் செய்வது இப்போதைக்கு அவசிய தேவை’ என்கிறார் இயக்குனர் பொன்ராம்
 
...................................................................................................
 
மம்மி வேடத்தில் மீனாதிருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் மீனா, தற்போது மலையாளத்தில் 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘திரிஷ்யம்’ என்ற படத்தில் மோகன்லால் மனைவியாக 2 குழந்தைகளின் அம்மாவாக நடிக்கிறார். இதுதவிர மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய ‘பால்ய கலாஷகி’ என்ற படத்திலும் அம்மா வேடம் ஏற்றிருக்கிறார்.
 
----------------------------------------------------------------------------
 
நயன்தாரா நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கிடையில் அவர் 2 முறை காதல் வலையில் சிக்கி இருக்கிறார். மனம் உடைந்து நடிப்புக்கு முழுக்கு போடவும் எண்ணி 1 வருடம் படங்களை ஏற்காமலும் இருந்திருக்கிறார். காதல் தோல்வியில் பாடம் கற்றவர் நடிப்பு பள்ளியில் பாஸ் ஆகி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நாட் அவுட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இவர் தற்போது ஆர்யாவுடன் ‘ராஜா ராணி அஜீத்துடன் ‘ஆரம்பம் ஜெயம் ரவியுடன் பெயரிடப்படாத படம், கோபி சந்துடன் ‘ஜெய் பாலாஜி மற்றும் ‘அனாமிகா‘ என கைநிறைய படங்களுடன் இருக்கிறார்
 
....................................................................................................
 
7 கிலோ அவுட்புது ஹீரோயின்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது தோற்றத்தை முற்றிலுமாக ஸ்லிம்மாக்கி இருக்கிறார் சார்மி. கடந்த 2 மாதத்தில் கடுமையான உணவு கட்டுப்பாடுடன் இருந்து 7 கிலோ வெயிட் குறைத்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கண்டதை சாப்பிட்டு மறுபடியும் வெயிட் போட்டுவிடாதே என்று அவரது மம்மி அட்வைஸ் செய்திருப்பதுடன் பத்திய சாப்பாட்டை கூட கொடுத்தனுப்பி விடுகிறார். வெயிட் லாஸ் பட சான்ஸ் வாங்கிக்கொடுக்குமா என்பது இனிதான் தெரியுமாம்
 
....................................................................................................
 
இன்னொரு சிங்கோலிவுட்டில் ஏற்கனவே சாயா சிங், விசாகா சிங் என இருவர் இருக்கின்றனர். இந்த பட்டிய லில் இணைகிறார் ரகுல் ப்ரீத்தி சிங். தற்போது கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னம்மோ ஏதோ படத்தில் நடிக்கிறார். சரியான சமயத்தில் கவுதமின் காலை வாரிவிட்டு அவரை வம்பில் சிக்க வைக்கும் சுட்டித்தனமான வேடம் ஏற்றிருக்கிறார் ரகுல். ஏற்கனவே இவர் ‘தடையற தாக்க படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்
 
....................................................................................................
 
தமிழுக்கு வருவாரா?‘இயற்கை படத்தில் நடித்த குட்டி ராதிகா கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து கொண்டு செட்டில£னார். நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தவர் கன்னடத்தில், ‘சுவீட்டி நன்னா ஜோடி‘. என்ற படத்தில் நடிக்கிறார். மறுபடியும் தமிழுக்கு அழைத்தால் வருவீர்களா என்றால் கையை விரித்து உதட்டை பிதுக்குகிறாராம்.

Comments