தலைவா படத்தில் நீக்கப்பட்ட அரசியல் வசனம்: நாளை திரைக்கு வருகிறது "தலைவா'!!!

19th of August 2013
சென்னை::தலைவா படத்தின் பிரச்சனைக்குரிய அரசியல் வசனங்களை படக்குழு நீக்கியிருக்கிறது.  ஆகஸ்ட் 9 வெளியாக வேண்டிய படம் ஏன், எதற்கு யாரால் என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் தெரியாமல் முடக்கப்பட்டது.
 
கெஞ்சல்கள், கண்ணீர்கள், புகழ் அறிக்கைகள் என சிலபல நாடகங்களுக்குப் பிறகு திரைமறைவில் படத்தை முடக்கியவர்கள் படத்தை வெளியிடலாம் என கருணை கூர்ந்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் அரசியல் வசனங்களை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
 
அதன்படி தலைவா டைட்டிலுக்கு கீழ் இடம்பெற்ற டைம் டு லீட் கேப்ஷன் மற்றும் படத்தில் இடம்பெறும், தமிழ்நாட்டு அரசியலுக்கு நீ தயாராயிட்ட என்ற வசனத்தையும் நீக்கியிருக்கிறார்கள்.
 
எல்லாம் சரி, நாமும் மற்றவர்களும் பிரச்சனைக்குரிய வசனம் என்கிறறோமே... யாருக்கு அந்த வசனங்களால் பிரச்சனை...?

"தலைவா' திரைப்படம் வரும் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடத்த "தலைவா' திரைப்படம் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.

இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கோரி நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர், உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினர். அதற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில், தலைவா படம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவிஸின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் படம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்ட தேதி வெளியிடப்படாமல் 10 நாள்களுக்கு பின் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் தோரணங்கள் கட்அவுட் வைத்து தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

Comments