16th of August 2013
சென்னை::சிங்கம் 2 படப்பிடிப்பில் காலில் அடிபட்ட ஸ்டன்ட் கலைஞருக்கு விஜய் உதவி செய்துள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா, அனுஷ்கா நடித்துள்ளனர்.
சென்னை::சிங்கம் 2 படப்பிடிப்பில் காலில் அடிபட்ட ஸ்டன்ட் கலைஞருக்கு விஜய் உதவி செய்துள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா, அனுஷ்கா நடித்துள்ளனர்.
சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் சூர்யா கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து வில்லனை தூக்கி வீச வேண்டுமாம். இந்த காட்சியில் ஹரியின் 12 படங்களில் அடியாளாக நடித்திருக்கும் ரஞ்சன் எனும் ஸ்டன்ட் கலைஞர் நடித்திருக்கிறார். காட்சிப்படி சூர்யா, ரஞ்சனை பலம் கொண்ட மட்டும் தாக்க, எகிறி குதித்து கடலில் விழுகிறார் ரஞ்சன்.
ஆனால் அவர் கொஞ்சம் தடுமாறி
கடலுக்குள் இருந்த பாறையில் விழுகிறார். இதில் ரஞ்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
உடனே அவரை அருகிலிருந்த மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ரஞ்சனால் இனி நடக்கவே முடியாது என்கிற அதிர்ச்சியளிக்க கூடிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். இதனிடையே காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சனை, சூர்யா ஒருமுறை மட்டும் பார்க்கச் சென்றிருக்கிறார். அதன்பிறகு படக்குழுவினர் யாரும் அந்தப் பக்கமே வரவே இல்லையாம்.
இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் ரஞ்சனுக்கு மருத்துவ உதவி அளித்திருக்கிறார். இதனையடுத்து அவர் சென்னைக்கே வந்து சூர்யாவையும் ஹரியையும் பார்த்து ரஞ்சனின் நிலைமையை எடுத்துச் சொல்ல, நான் ஒன்றும் செய்ய முடியாதே என்றாராம் சூர்யா. ஆனால் ஹரியோ, ஜாக்கிரதையா ஃபைட் பண்ணலன்னா இப்படிதான் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டாராம்.
இந்நிலையில்தான் சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட இன்ஸ்பெக்டர் நேராக படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று விஜய்யை சந்தித்து நடந்ததை சொல்லியிருக்கிறார். உடனே விஜய், 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் ரஞ்சன் வீட்டுக்கு தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினாராம்.
Comments
Post a Comment