போட்டி ஹீரோயின்கள் வதந்தி பரப்பினார்கள் பாவனா பரபரப்பு புகார்!!!

26th of August 2013
சென்னை::ஆறு மாதத்துக்கு ஒரு முறை எனக்கு திருமணம் என்று சில ஹீரோயின்கள் வதந்தி பரப்பினார்கள் என்றார் பாவனா.‘சித்திரம் பேசுதடி, ‘தீபாவளி ‘அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. இவர் கூறியதாவது:
 
மலையாளத்தில் ‘நம்மால் படத்தில் 15 வயதில் நடிக்க வந்தேன். முதல் படத்துக்கு பிறகு எனக்கு தங்கையாகவே நடிக்க வாய்ப்புகள் வந்தன. தமிழ், தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவே அதில் கவனம் செலுத்தினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு பட வாய்ப்புகளே அமையாமல் போனது. கடந்த 2004ம் ஆண்டுடன் என்னுடைய நடிப்பு பயணம் முடிந்தது என்று எண்ணினேன். என் பெற்றோரிடமும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படிக்க போவதாக கூறிவிட்டேன். ஆனால் ஒரு வருட இடைவெளியில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தது.
 
அன்றுமுதல் இன்றுவரை நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை பற்றி காதல், திருமணம் என்று நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. எல்லாவற்றையும் பெரிதாக எடுத்துக்கொண்டு வருத்தப்பட்டதில்லை. மனதை பாதித்த ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வதந்தி எல்லாம் எனக்கு போட்டியாக இருந்த ஹீரோயின்கள்தான் கிளப்பிவிட்டனர். ஒவ்வொரு 6 மாதத்துக்கும் எனக்கு திருமணம் என்று தகவல் வெளியாகும். எனக்கு திருமணம் என்பது நிச்சயம் நடக்கும். அது முடிவாகும்போது நானே தெரிவிப்பேன். இதற்கிடையில் இதுபோல் கிசுகிசுவை பரப்புவது ஏன் என்றுதான் புரியவில்லை.

Comments