22nd of August 2013
சென்னை::நடிப்பைத் தொடர்ந்து ஆர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு அமர காவியம் என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் அவருடைய தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் 'காதல் டு கல்யாணம்', 'எட்டுத் திக்கும் மதயானை' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'நான்' இயக்குனர் ஜீவா ஷங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவையும் அவரே கவனிக்கிறார். உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமர காவியம் படத்தை ஆர்யா தனது சொந்த பேனரான தி ஷோ பீப்பிள் என்கிற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment