வேட்டி, சட்டை, சிங்கிள் டீ - அஜீத்தின் புதிய கெட்டப்:!!!அல்டிமேட்டின் ஸ்டார்டிங் படத்தின் முக்கியமான காட்சி இணையத்தில் லீக் ஆனதில் பேஸ்தடித்து போனது மொத்த யூனிட்டும்!!!
15th of August 2013
சென்னை::விஷ்ணுவர்தனின் ஆரம்பம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆரம்பத்துக்குப் பிறகு அடுத்த வருட பொங்கலுக்கு தேதி குறிக்கப்பட்ட வீரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சென்னை மாநகரின் சுவரை அலங்கரிக்கின்றன.
சென்னை::விஷ்ணுவர்தனின் ஆரம்பம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆரம்பத்துக்குப் பிறகு அடுத்த வருட பொங்கலுக்கு தேதி குறிக்கப்பட்ட வீரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சென்னை மாநகரின் சுவரை அலங்கரிக்கின்றன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் கிராமத்து படம் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தமன்னா, விதார்த், மனிஷ் உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. விஜயா புரொடக்சன் தயாரிப்பு. சமீபத்தில் ரயில் சண்டைக் காட்சிக்காக ஒடிசா சென்றுவிட்டு திரும்பியது வீரம் டீம்.
விஷ்ணுவர்தன் படத்தின் பெயரை வெளியிட முக்கி முனகிக் கொண்டிருந்த நேரத்தில், படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு சிறுத்தை பாய்ச்சல் காட்டுகிறார் சிவா.
வேட்டி சட்டையில் ட்ரேட் மார்க் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் சாயா டம்ளருடன் இதுவரை இல்லாத இணக்கம் காட்டுகிறார் அஜீத்.
படம் எப்படி இருக்குமோ...?
அல்டிமேட்டின் ஸ்டார்டிங் படத்தின் முக்கியமான காட்சி இணையத்தில் லீக் ஆனதில் பேஸ்தடித்து போனது மொத்த யூனிட்டும்!!!
காட்சியை ரகசியமாக படமெடுத்து இணையத்தில் ஏற்றிய கருப்பு ஆடு யார் என்ற விசாரணை தற்போது நடக்கிறது. நம்பிக்கைக்குரிய உதவி இயக்குனர்களும் கூட இந்த விசாரணை வளையத்திலிருந்து தப்பவில்லை. இவ்வளவுதானா இவங்க நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கை என்று உள்வட்டத்திலேயே கசப்பு பரவியிருக்கிறது.
Comments
Post a Comment