20th of August 2013
சென்னை::இந்திய பாடகர்கள் உரிமை சங்கத்தின் (இந்தியன் சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன்) ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் பின்னணி பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா, ஹரிகரன், வாணிஜெயராம், இஸ்ரோ அமைப்பின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் டேன்டன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் ஜாவித் அக்தர், சோனி நிகம் ஆகியோர் பல ஆண்டுகள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு பிறகு 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பாடகர்களுக்கான காப்புரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1963ம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்த எல்லா பாடல்களுக்கும் 2012 செப்டம்பர் 5ந் தேதி முதல் ராயல்டி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.
நாங்கள் யாரையும் எதிர்த்து போராடவில்லை. எங்களுக்கான உரிமையை கேட்கிறோம். நாங்கள் ராயல்டி கேட்பதால் இசை அமைப்பாளருக்கோ, தயாரிப்பாளருக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு சேரவேண்டியதிலிருந்து நாங்கள் எதையும் கோரவில்லை. எங்களுக்குத் தனியாக பெற்றுத் தாருங்கள் என்று கேட்கிறோம். தொலைக்காட்சி, வானொலி, செல்போன், உள்ளிட்ட பல வழிகளில் கமர்ஷியலாக ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு மிகக்குறைந்த ராயல்டியை கேட்கிறோம். அரசு ஏற்றுக்கொண்டு சட்டம் இயற்றியதைத்தான் நாங்கள் வேண்டுகோளாக வைக்கிறோம்.
எக்ஸ்ட்ரா தகவல்
30 ஆண்டுகளுக்கு முன் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ஒருவர் மார்க்கெட் நிலவரம் தெரியாமல் பாடலுக்கு ^500 மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொண்டு பாடினார். அவர்..... கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான சமீபத்தில் மறைந்த டி.எம்.சவுந்திரராஜன்.

Comments
Post a Comment