நான் யாரையும் திருமணம் செய்யவில்லை’’: அஞ்சலி விளக்கம்!!!

31st of August 2013
சென்னை::சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்துகொண்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிருக்கின்றன.
‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாகவும், திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டதாகவும் என்பதுதான் அது. இவை எதற்கும் பதில் அளிக்காத அஞ்சலி தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
 
கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி... சமீபத்தில் நான் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும் படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
 
இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய மின்னஞ்சல் newsfromanjali@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி! வணக்கம்!’’ என்று ஐதராபாத்திலிருந்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை அஞ்சலி.

Comments