மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு!

29th of August 2013
சென்னை::மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில்  புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மெட்ராஸ் கபே ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளார். இதை கண்டித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் (புலிகள் ஆதரவு) எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ராஸ் கபே புலிகளுக்கு தமிழர்களுக்கு எதிரான படம் இலங்கையில் சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர்.  புலிகள் இழிவு படுத்தப்பட்டு உள்ளனர். புலிகளின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் படம் வெளியிடப் படவில்லை.

இந்த நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா புலிகளின் தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.(புலிகள் ஆதரவு) எஸ்.எஸ்.சிவா.

Comments