மேல்தட்டு ஹீரோ பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கார்த்தி தற்போது வெயிட்டிங் லிஸ்டிலேயே!!!
14th of August 2013
சென்னை::பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்களின் வெற்றி கார்த்தியின் மார்க்கெட்டை மளமளவென்று உயர்த்தியது. ஆனால், அதன்பிறகு அவர் நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் சறுக்கி விட்டன. இதனால், அடுத்த ஓரிரு படங்களிலேயே மேல்தட்டு ஹீரோ பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கார்த்தி தற்போது வெயிட்டிங் லிஸ்டிலேயே இருந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம்தான்
பிரியாணி. யுவன் ஷங்கர் ராஜாவின் 100 வது படமான இப்படத்தில் கார்த்தியுடன் ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி போன்ற கமர்சியல் கலவைகளுடன் படத்தை கமகமக்க தயார் பண்ணி வைத்துள்ளாராம் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் சில அதிருப்திகளை சந்தித்த கார்த்தி, இப்போது படம் எதிர்பார்த்தபடியே வந்திருப்பதால் கண்டிப்பாக இந்த முறை ஹிட்தான் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

Comments
Post a Comment