கருப்பாக இருப்பதால் கிண்டல் செய்தார்கள் மனம் திறந்தார் விசாகா!!!

22nd of August 2013
சென்னை::ஹீரோயினாக வெற்றி பெற தோல் நிறம் முக்கியமல்ல என்றார் விசாகா.‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் விசாகா சிங். அவர் கூறியது:சினிமாவில் ஜெயிக்க நிறம் முக்கியமல்ல. திறமைதான் முக்கியம். தோல் நிறத்தை வைத்து மனிதர்களை பற்றி முடிவு செய்வது எனக்கு பிடிக்காது. என் பள்ளி நாட்களில் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது. என் வீட்டிலேயே நான்தான் கருப்பாக இருப்பேன்.
 
உணர்வுகளை புரிந்துகொள்ளாத சிலர் என்னிடம் பேசும்போது நீ ஏன் கருப்பாக இருக்கிறாய்? என்பார்கள். இப்படி இருப்பதால் திருமணம் நடப்பதே கஷ்டம் என்று உறவினர்கள் கிண்டல் செய்வார்கள். சிலரது விமர்சனத்தால் நான் தாழ்வு மனப்பான்மையுடனே வளர்ந்தேன். ஆனால் இந்த விமர்சனமெல்லாம் எவ்வளவு பொய்யானது என்பதை எனது பெற்றோர் எனக்கு உணர்த்தினார்கள்.  
படித்த சில ஆண் நண்பர்கள் இன்னும்கூட சிவப்பான பெண்ணைத்தான் மணப்பேன் என்று கூறும்போது ஷாக் ஆக இருக்கும். ‘கருப்பு தனி அழகு என்ற பிரசார முகாமில் பங்கேற்க உள்ளேன். இந்த முகாமுக்கு நந்திதாதாஸ்தான் தூதராக இருக்கிறார். இது சிவப்பானவர்களுக்கு எதிரான பிரசாரம் அல்ல. எல்லா நிறமும் அழகு என்பதை உணர்த்தவும், நிறத்தை வைத்து மனிதர்களை எடைபோடக்கூடாது என்பதை விளக்கவும் இந்த முகாம் நடக்கிறது.

Comments