ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கவே விருப்பம் – தமன்னா!!!

30th of August 2013
சென்னை::தமன்னா, தற்போது தமிழில் ஒரே ஒரு படத்தில்தான் நடித்து வருகிறார்.
 
அஜித், ஜோடியாக நடிக்கும் ‘வீரம்’ படம்தான் அது. இப்படம் தவிர, தெலுங்கில் ஒரு படத்திலும், ஹிந்தியில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கத்தான் எனக்கு விருப்பம்”, என்று கூறியிருக்கிறார்.
 
ஸ்டார் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில்தான் நன்மை இருக்கிறது. நிறைய பேருக்கு ஹீரோக்கள் பேர் வாங்கி விடுவதாக ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதைத்தான் எனக்கு பிளஸ் பாயின்டாக கருதுகிறேன்.
 
வழக்கமான மசாலா படங்களில் நடிப்பதுதான் கடினம். ஏனெனில், ஹீரோக்களுக்குத்தான அதிகமான காட்சிகள் இருக்கும் . ஹீரோயின்களுக்கு ஒரு சில காட்சிகளும் பாடல்களும் மட்டுமே கிடைக்கும்.
அந்த கிடைத்த வாய்ப்பில் ஹீரோயின்கள் சிறப்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தாக வேண்டும்.
 
ஹீரோயின் ஓரியன்டட் படங்களில் ஹீரோயின்கள்தான் மொத்த படத்தையும் தாங்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்குவதும் சவாலான விஷயம்,” என்கிறார் தமன்னா.

Comments