செப்டம்பரில் வெளிவரவுள்ள “வணக்கம் சென்னை!!!

21st of August 2013
சென்னை::கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள வணக்கம் சென்னை படத்தை வரும் செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் வணக்கம் சென்னை.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதில் நாயகனாக சிவா, நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். சந்தானத்தின் சரவெடி காமெடியும் படத்தில் இடம்பெறுகிறது.

இவர்கள் தவிர, ஊர்வசி, ரேணுகா, ராகுல் ரவீந்தர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

தற்போது *போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comments