26th of August 2013
சென்னை::கோச்சடையான் படம் தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் ரிலீஸாகிறதாம். ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தின் மூலம் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படம் முதன்முறையாக மோஷன் கேப்சர் என்கிற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரைலர் கூட தயாராகிவிட்டதாம். 'அவதார்' படம் போலவே இந்தப் படத்திலும் விஷுவல் எபக்ட் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டதாம். படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இந்நிலையில் தெலுங்கிலும் இப்படம் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் வெளிவர இருக்கிறதாம். அதற்கான பணிகளும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கோச்சடையான் படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment