ஜப்பான் நாட்டிற்கு போகும் அஞ்சலி!!!

30th of August 2013
சென்னை::விஷால், இயக்குனர் களஞ்சியம் உட்பட்ட தமிழ்த் திரையுலகினர் அஞ்சலியைத் தேடிக் கொண்டிருக்க அவரோ, தான் நடிக்கும் தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக ஜப்பான் நாட்டிற்குப் போக இருக்கிறாராம்.
 
வெங்கடேஷ் ஜோடியாக அஞ்சலி நடிக்கும் தெலுங்குப் படம் ‘மசாலா’. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை ஜப்பான் நாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.
இதற்காக வெங்கடேஷ், அஞ்சலி உட்பட படப்பிடிப்புக் குழுவினர் செப்டம்பர் 3ம் தேதியன்று ஜப்பான் நாட்டிற்கு போகப் போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 
தெலுங்குத் திரையுலகினரால் தொடர்பு கொள்ள முடிந்த அஞ்சலியை நம்மவர்களுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகிறதே….

Comments