இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பூலோகம்!!!

27th of August 2013
சென்னை::ஜெயம் ரவி – திரிஷா ஜோடி நடிக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வரும் பூலோகம் படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஜெயம் ரவி, ஹாலிவுட் வில்லன் நடிகர் நாதன் ஜோன்சுடன் மோதும் குத்துச்சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக பிரசாத் லேப் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான குத்துச்சண்டை மேடையுடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த 8 நாட்கள் மட்டும் நடிப்பதற்கு ஹாலிவுட் வில்லன் நடிகர் நாதன் ஜோன்சுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. படத்தில், உச்சக்கட்ட சண்டை காட்சியாக இது வைக்கப்பட்டு இருக்கிறது.

பூலோகம் படத்தில் ஜெயம் ரவி – திரிஷா ஜோடியுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் இருக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுத, என்.கல்யாண கிருஷ்ணன் கதை–திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

Comments