சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் பிந்து மாதவி!!!

29th of August 2013
சென்னை::சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் பிந்து மாதவி. எப்படி கவுரவ வேடத்துக்கு ஒப்புக்கொண்டார் என்று சிலர் மண்டையை குழப்பிக்கொள்கின்றனர்.
 
நிறைய படங்களில் கெஸ்ட் ரோல் வந்தும் ஏற்காத பிந்து மாதவி இப்படத்தில் நடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர்தானாம். தனது திரையுலக வாழ்க்கையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என்ற 2 படத்தை தயாரித்த நிறுவனம் இப்படத்தையும் தயாரிப்பதால் அவருக்கு நன்றி விசுவாசம் காட்டவே கெஸ்ட்டாக நடித்தாராம்.
 

Comments