ஐ படம் குறித்த சீக்ரெட்!!!

23rd of August 2013
சென்னை::ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஐ. இதில் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பொதுவாக ஷங்கர் தன்னுடைய படம் வெளியாகும் வரை அது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் பார்த்துக் கொள்வார். அந்த பாணியை ஐ படத்திலும் அவர் கடைபிடிக்க தவறவில்லை. இருந்தும் எப்படியோ படத்தின் கதை மற்றும் விக்ரமின் கெட்டப் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள் தான் ஐ படத்தின் கதைக்களம் என்று செய்திகள் கசிந்திருக்கின்றன. தனது உடல் எடையை பாதியாகக் குறைத்து கொண்டு விக்ரம் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று. தனது தோற்றம் வெளியில் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது முக்கியமாக மீடியாக்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைமறைவாக இருந்தார் விக்ரம்.

இதற்காக அவர் அரிசி உணவை தவிர்த்து வெறும் பச்சைக்காய்கறிகள், பழங்கள் என ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு உட்கொண்டு உடல் எடையைக் குறைத்திருக்கிறார். அதாவது 84 கிலோ இருந்த தன் எடையில் 14 கிலோவை குறைத்திருக்கிறாராம். அதோடு நில்லாமல் மேலும் 10 கிலோ குறைக்க இருக்கிறாராம். உடல் எடைக் குறைப்பினால் ஏற்படும் தோற்ற மாற்றங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்கிறாராம் விக்ரம். அவற்றில் ஒன்று தற்போது லீக்காகி உள்ளது. படத்தில் பாதி பழைய விக்ரமும், மீதி பாதியில் ஒல்லிபிச்சான் விக்ரமும் நடிக்கிறாராம்.

Comments