விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ள விக்ரம் பிரபு!!!

21st of August 2013
சென்னை::நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான கும்கி புகழ் விக்ரம் பிரபு, சினிமாவில் தற்போது செம பிஸியாக இருக்கிறார்.

கும்கி படத்திற்கு பிறகு அவருக்கு பாராட்டும், புகழும் குவித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மூன்று படங்கள் அவர் கையில் உள்ளன.

எம். சரவணன் இயக்கத்தில் இவன் வேறமாதிரி, தூங்க நகரம் இயக்குனர் கெளரவ் நாராயணன் இயக்கத்தில் சிகரம் தொடு மற்றும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இப்படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேரக்டரில் அவர் நடிக்கிறார்.

கும்கி படத்தை போல இந்த படங்களும் அவருக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது

. இப்படங்களுக்கான சூட்டிங் முடிந்த பிறகு, மேலும் படங்களில் நடிப்பதா அல்லது படத்தை இயக்குவதா என்பது தான் விக்ரம் பிரபுவின் குழப்பமே.

படத்தை இயக்குவதில் தீராத காதல் கொண்ட விக்ரம் பிரபு, விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Comments