21st of August 2013
சென்னை::திருவான்மியூரிலிருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம், ஹெல்மெட் அணிந்தபடி அஜீத் பைக்கில் சென்றார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படங்களில் நடித்து வருகிறார் அஜீத். கார் ரேஸ், பைக் ரேஸில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த அஜீத் தற்போது அந்த போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும் ரேஸ் பைக், கார் ஓட்டும் ஆர்வத்திலிருந்து பின்வாங்கவில்லை.
சமீபத்தில் பிஎம்டபிள்யூ எஸ்
1000 என்ற புது மாடல் ரேஸ் பைக்கை பல லட்சம் கொடுத்து வாங்கினார். முன்பெல்லாம் இரவு நேரங்களில் ஈசிஆர் சாலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக் ஓட்டி மகிழ்ந்தார் அஜீத். தற்போது பகல் நேரத்திலேயே சுற்ற ஆரம்பித்திருக்கிறார். நேற்று முன்தினம் பிஎம்டபிள்யூ 1000 பைக்கில் திருவான்மியூர் வீட்டிலிருந்து ஹெல்மெட் மற்றும் ரேஸ் உடை அணிந்து புறப்பட்ட அஜீத் பெங்களூர் வரை சென்றார்.
அவருடன் இரண்டு நண்பர்களும் மற்றொரு பைக்கில் சென்றனர். பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் இறங்கிய அஜீத் அங்கு காபி சாப்பிட்டார். திடீரென்று ஓட்டலுக்குள் அஜீத் நுழைந்ததை பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிலர் அவரிடம் சென்று பேசினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அஜீத் ஓட்டிச் சென்ற ரேஸ் பைக் ஆரம்பம் படத்திலும் இடம்பெறுகிறது.
Comments
Post a Comment