லண்டனில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி - கமல் கலந்துகொள்கிறார்!!!

13th of August 2013
சென்னை::தமிழகத்தின் இசை தாகத்தை தீர்த்த இசைஞானி, தற்போது உலக தமிழ் மக்களின் இசை தாகத்தை அவ்வபோது நேரில் சென்று தீர்த்து வருகிறார். அந்த வகையில் லண்டன் மக்களின் இசை தாகத்தை தீர்க்க ஞானி, இம்மாதம் லண்டன் செல்கிறார்.

வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி லண்டன் நகரில் நடைபெறப் போகிறது. ஐங்கரன் இண்டேர்நேஷனல் நிறுவனம், லைக்கா மொபைல் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள சுமார் 15000 பேர் மரக்கூடிய ஓ2 (O2) அரங்கில் நடைபெறப் போகிறது.

சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் ராஜாவுடன் பங்குபெறுகிறார்கள். கடந்த ஒரு வார காலமாக இதற்கான ரிகர்சலில் ஈடுபட்டு வரும் இளையராஜா, இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம், எத்தனை பாடல்கள் இடம்பெறும் என்று கேட்கப்பட்டது, "நான் என் கச்சேரியில எப்பவும் ஜனனி ஜனனிங்கிற பாடலோடுதான் ஆரம்பிப்பேன். அப்புறம் நான் தேடும் செவ்வந்திப்பூ இல்லாமல் எப்படி? அதை பாடுனா, அப்புறம் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமான்னு லண்டன்ல நின்று பாடாம வேறு எங்க நின்று பாடுறது." என்று ராஜா பதில் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் கலந்துகொள்கிறார். தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் இருக்கும் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி கூறிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில், "தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் உள்ளேன். முடியும் தருவாயில் உள்ளது. இசைஞானியின் ரசிகன் என்கிற தகுயோடு நானும் லண்டனின் இசைஞானியின் இசை நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பேன்." என்று கமல்ஹாசன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இசை ஞானியின் இசையில் கமல் பாடிய பாடலை, கமலே மேடையில் பாடுவார் என்பது இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பாகும். மேலும் இளையராஜாவின் இசையில் உருவாகி லண்டனில் ஒலிசேர்ப்பு பணி நடைபெற்ற 'மேகா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் இந்த இசை நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.

Comments