31st of August 2013
சென்னை::ஆரம்பம் படத்தின் விநியோக உரிமை மிகப்பெரிய விலைக்கு போய்யுள்ளது. அஜீத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஆரம்பம்.
பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் இது. படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே ஆரம்பம் பட டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் கோயம்புத்தூர், திருப்பூர், ஊட்டி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கான விநியோக உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம். எந்திரன் படத்துக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் அதிக விலைக்குப் போன படம் இதுவாம்.
Comments
Post a Comment