30th of August 2013
சென்னை::குறும்பட இயகுநர்களின் தொடர் வெற்றிக்காரணமாக, தமிழ் திரையுலகினர் மத்தியில் குறும்ப்பட இயக்குநர்களுக்கும், குறும்படங்களுக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குறும்படம் தான் 'பண்ணையாரும் பத்மினியும்'. தற்போது இந்த குறும்படம் வெள்ளித் திரையில் மின்னுவதற்காக முழுநீளப் படமாக அதே தலைப்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது.
பழம்காலத்து பத்மினி கார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. அதனால் தான் இப்படத்திற்கு இந்த தலைப்பு. விஜய் சேதுபது ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சினேகா, பண்ணையாரின் மகளாக நடிக்கிறார். பண்ணையாராக ஜெயபிரகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் அட்ட கத்தி படத்தின் ஹீரோ தினேஷ், கெளரவ வேடத்தில் நடிக்கிறார்.
மேஜிக் பாக்ஸ் பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இசை வெளியீட்டு விழாவையும், இப்படத்தின் விளம்பரத்தையும் வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழுவினர், இப்படத்திற்காக இரண்டு பத்மினி கார்களைக் கொண்டு ரோட் ஷோ ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு கார் நாகர்கோவிலில் இருந்தும், மற்றொரு கார் கோவையில் இருந்தும் இப்படளை வரவேற்கும் விதத்தில் பல இடங்களில் கலை நிகச்சிகள் நடத்தப்பட்டு இறுதியில் சென்னைக்கு வரும்போது 'பண்ணையாரும் பத்மினியும்'படக்குழுவினர் வரவேற்பார்கள்.

Comments
Post a Comment