21st of August 2013
சென்னை::ராஜா ராணி’ படத்தின் இயக்குனரான அட்லீயை ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக ‘ எந்திரன், நண்பன்’ ஆகிய படங்களில் பணி புரிந்தவர்.
ராஜா ராணி’ படத்தின் இசை வெளியீடு வரும் 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விழாவுக்கு வருமாறு இயக்குனர் அட்லீ அழைப்பிதழ் வழங்கினார்.
படத்தின் டிரைலர், டீஸர்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் விதம் ஆகியவற்றை ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
படம் வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் இயக்குனர் அட்லீ…
Comments
Post a Comment