கல்லூரி நண்பனுக்கு கை கொடுத்த சீயான் விக்ரம்!!!

20th of August 2013
சென்னை::விக்ரம் நடித்த தில், தூள் ஆகிய படங்களை இயக்கியவர் தரணி. ஆனால் அதன்பிறகு கில்லி, ஒஸ்தி என்று விஜய், சிம்பு போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கிய தரணி விக்ரம் பக்கம் திரும்பவில்லை. மேலும், ஒஸ்தியின் தோல்வியினால் அவர் எதிர்பார்க்கிற நடிகர்கள் யாரும் கால்சீட் கொடுக்கவும் தயாராக இல்லை. இந்த நிலையில், விக்ரமை வைத்து ஏற்கனவே ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது மட்டுமின்றி, அவருடன் கல்லூரியில் படித்த நண்பர் என்ற முறையில் மீண்டும் விக்ரமை அணுகி கால்சீட் கேட்டாராம் தரணி.
 
அதற்கு, விக்ரமிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதோ என்று பதற்றத்தில் தரணி இருந்தபோது, படப்பிடிப்புக்கு ஏற்பாடு பண்ணு, ஐ படத்தை முடிச்சதும் வந்துடுறேன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் விக்ரம். இதனால் தனது புதிய படத்திற்கு ராஸ்கல் என்று பெயர் வைத்து விட்டு தற்போது பாடல் கம்போஸிங், லொகேசன் பார்ப்பது என்று தில்லாக இறங்கி விட்ட தரணி, அப்படத்தில் தனது அபிமான நடிகையான த்ரிஷா சாயலில் ஒரு நடிகையை கண்டுபிடித்து விக்ரமுடன் டூயட் பாட வைக்கவும் முடிவெடுத்தள்ளாராம்.

Comments