22nd of August 2013
சென்னை::புதுமுக இயக்குனர் கணேஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தகராறு.
இதில் கதாநாயகனாக அருள்நிதியும் கதாநாயகியாக பூர்ணாவும் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
மதுரையில் 2005ல் நடந்த உண்மை சம்பவத்தை சினிமாக எடுத்துள்ளோம். இது மதுரையின் பின்னணியில் நடக்கும் நான்கு நண்பர்களின் கதை. இந்த நான்கு நண்பர்களும் திருடர்கள். இவர்கள் ஒவ்வொரு முறையும் திருடச்செல்லும்போது இவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது.
ஒரு சமயம் திருடப் போகும்போது இவர்களில் ஒருவரான சரவணன் (அருள்நிதி), கந்துவட்டி ரவுடியின் மகளாக, திமிரான ரோலில் வரும் மீனாட்சி (பூர்ணா) மீது காதல் கொள்கிறார். அதன் பின்பு காதலுக்காக திருடுவதை விட்டாரா? அல்லது நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து திருடுகிறாரா? என்பதை படம் விவரிக்கிறது.
Comments
Post a Comment