ஜிகர்தண்டா படத்தில் உதவி இயக்குநராக நடிக்கும் சித்தார்த்!!!

26th of August 2013
சென்னை::இயக்குநர்களை மையமாக வைத்து படம் வந்தாலே அது சோகமான கதையாகதான் இருக்கும். ஆனால், அதை மாற்றும் விதத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது 'ஜிகர்தண்டா'. அதுவும் இதுவரை மதுரை சண்டியர்களை அதிரடியாக காட்டி வந்த தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி, காமெடி பீஸாகவும் காட்டப்போகிறார்களாம்.

பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இபப்டத்தில் ஹீரோ சித்தார்துக்கு உதவி இயக்குநர் வேடம். உதவி இயக்குநராக இருக்கும் சித்தார்த், தான் இயக்கும் படத்தின் கதைக்காக சில தகவல்களை திரட்ட மதுரைக்கு செல்கிறார். அப்படி செல்லும் அவர், இதுவரை கேள்விப்பட்ட மதுரைக்கு மாறாக ஒரு மதுரையைப் பார்க்கிறார்.

சித்தார்த் பார்க்கும் அந்த மதுரையையும், அங்கு நடக்கும் சம்ப்வங்களையும் காமெடியாக சொல்லியிருக்கிறார்கள்

Comments