சென்னை::தனுஷ், அமலா பால் முதல் முறையாக இணைந்து நடிக்க, ‘பொல்லாதவன், ஆடுகளம்’ படங்களின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் முதல் முறையாக இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் ஆரம்பமாகிறது.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் 25வது படம் இது.தனுஷ் தற்போது சற்குணம் இயக்கத்தில் ‘நய்யாண்டி’ படத்திலும் நடித்து வருகிறார்.படத்தின் தலைப்பே படத்தின் கதையைச் சொல்லும் விதமாகத்தான் அமைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் ‘தலைவா’ படம் வெளியாவதும் , தனுஷுடன் நான் முதன் முறையாக நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் ஆரம்பமாகவதும் மிக்க மகிழ்ச்சியாக அமைந்துள்ளது” என இரு படங்களின் ஹீரோயினான அமலா பால் தெரிவித்துள்ளார்.
VIP-க்கு நமது வாழ்த்துகள்…
Comments
Post a Comment