21st of August 2013
சென்னை::மைனா படத்தின் வெற்றிக்குப்பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்பதுதான் அமலாபாலின் ஆசையாக இருந்தது. அவர் நினைத்தபடியே தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமாகி விட்டார். அதே வேகத்தில் தமிழிலும் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தவருக்கு இப்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படவாய்ப்பும் கிடைத்திருப்பதால் அடுத்து நம்பர்-ஒன் இடத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறார்.
இந்த நேரம் பார்த்து, தெலுங்கில் அமலாபால் நடித்த பெஜ்வாடு ரவுடிலு என்ற படம் சூப்பர் ஹிட்டானதையடுத்த தமிழ், இந்தி என இரண்டு மொழிகளுக்கும் டப் செய்யப்பட்டு வருகிறது. இதனால் செம உற்சாகத்தில் இருக்கிறார் அமலா. காரணம், தன்னைப்போலவே கேரளாவில் இருந்து வந்து தற்போது மும்பையில் முன்னணி நடிகையாக திகழும் அசின் மாதிரி தானும் பாலிவுட்டில் இடம் பிடிப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக இதை கருதுகிறாராம் நடிகை.
அதனால், இதுவரை தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாவதே எனது நோக்கம் என்று பேட்டிக்கு பேட்டி சொல்லி வந்த அமலாபால், இப்போது பாலிவுட்டில் இருந்து சரியான கதாநாயகி வாய்ப்புகள் வந்தால் என்ட்ரி கொடுப்பேன் என்றும் ஸ்டேட்மென்ட் விட்டு வருகிறார்.

Comments
Post a Comment