கமல் ஹாசனுடன் மோதும் அஜீத்!!!

21st of August 2013
சென்னை::அஜீத்தின் ஆரம்பம் திரைப்படமும், கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படமும் தீபாவளியன்று திரைக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
விஸ்வரூபம் வெற்றியைத் தொடர்ந்து கமல் அதன் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2-வை மும்முரமாக இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
 
இதனிடையே அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் இப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஆரம்பம் படமும் தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்கிற பேச்சு அடிபடுவதால் தீபாவளியன்று அஜீத்-கமல்ஹாசன் படங்கள் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Comments