புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ‘ராஜா ராணி’!!!

22nd of August 2013
சென்னை::இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் படங்களில் உதவி இயக்குனராய் இருந்தவர் அட்லி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ராஜா ராணி. இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் ஈ‌கோ, திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சிறிது நகைச்சுவையுடன் கூறியிருக்கிறேன். இப்பொழுது பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாததால் விவாகரத்து அதிகரிக்கிறது. இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட். ரொம்ப பாசிடிவ்வான படம். படத்தில் நல்ல புரிதல் தெரியும்.

படத்தின் கதையைக் கேட்டவுடன் ஆர்யா, ‘நான்  செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டார். நயன்தாரா பல பிரச்னைகளை சந்தித்த நேரம் என்பதால் அவரிடம் தயக்கத்துடன் கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் ‘நான் நடிக்கிறேன்’ என்று அவரும் ஒப்புக்கொண்டார். 3 வருடம் கழித்து ஒரு எனர்ஜியுடன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஆர்யா - நயன் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இப்படத்தில் ஜெய், நஸ்ரியாவும் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல மிகவும் சாதாரணமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ராஜாராணி படம் மக்களிடம் நல்ல அன்பையும் புரிதலையும் ‌சொல்லும் என்பது உண்மை.

இப்படத்தை 87 நாட்களில் முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிட்டோம். இந்த படத்திற்கு அதிகம் சப்போர்ட் செய்த முருகதாஸ் சாருக்கு நான் நன்றி சொல்லணும். அவர் இல்லாவிட்டால், நான் நினைத்தமாதிரி இப்படத்தை கொண்டுவந்திருக்க முடியாது. புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்‌.

Comments