21st of August 2013
சென்னை::விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தை இயக்கியவர் பூபதி பாண்டியன். அதன்பிறகு அவர் இயக்கிய காதல் சொல்ல வந்தேன் வெற்றி பெறாததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றிருந்தார். அவரை மீண்டும் தமிழுக்கு கூட்டிவந்து கதை கேட்டார் விஷால். அதில் பட்டத்து யானை கதை பிடித்து விட்டதால் மீண்டும் மலைக்கோட்டை மாதிரி ஒரு ஹிட் கொடுப்போம் என்று இருவரும் கைகோர்த்து களமிறங்கினர். படத்திற்கு புதிய பப்ளிசிட்டி தேவை என்பதால் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவையும் அறிமுகம் செய்த விஷால், சந்தானத்தை முக்கிய வேடத்திலும் நடிக்க வைத்தார்.
என்றபோதும், கதையும், கதையோட்டமும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததால் காலை வாரி விட்டது பட்டத்து யானை. அதோடு சந்தானத்தின் காமெடியும் எடுபடவில்லை. அதனால் மீண்டும் தோல்வி முகம் காட்டினார் பூபதி பாண்டியன். அதன்காரணமாக, பட்டத்து யானையை இயக்கி வந்தபோது, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க அவரை புக் பண்ணிவைத்திருந்த லிங்குசாமி மற்றும் இன்னொரு படம் இயக்க பேசி வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருமே இப்போது பேக் அடித்து விட்டார்களாம்.
அதனால் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்று புரியாமல் நின்று கொண்டிருக்கிறார் பூபதி.
Comments
Post a Comment