கவுதம் கார்த்திக்கின் புதிய படத்தின் பெயர் "என்னமோ ஏதோ"

25th of August 2013
சென்னை::சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறது. கௌதம் கார்த்திக் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இருவருமே தமிழுக்கு புதுசு என்றாலும் தெலுங்கு தேசத்தில் பாப்புலர் ஆனவர்கள். படத்தோட இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்து மூன்றாவது கட்ட ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வருகிறது. இமான் மியூசிக் போட்டுக்கிட்டிருக்கார். ரவி தியாகராஜன் டைரக்ட் செய்து வருகிறார்.

படத்துக்கு தலைப்பு வைக்க ரொம்பவே யோசித்துக் கொண்டிருந்தார்கள். ரசிகர்களும் படத்துக்கு தலைப்பு என்னமோ ஏதோ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தார்கள். இப்போது ஒருவழியாக படத்தின் தலைப்பை "என்னமோ ஏதோ" என்றே வைத்து விட்டார்கள். கோ படத்தில் வரும் பாடலின் முதல்வரியே படத்தின் தலைப்பாகி விட்டது.

Comments