24th of August 2013
சென்னை::மொசக்குட்டி படத்துக்காக ஸ்ரேயா கோஷல் "கள்ளப் பயலே கள்ளப் பயலே..." என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
மைனா, சாட்டை ஆகியப் படங்களை தொடர்ந்து ஜான் மேக்ஸ் தயாரிக்கும் படம் மொசக்குட்டி. இப்படத்தை ஜீவன் இயக்குகிறார். மைனா, கும்கி புகழ் எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் ஆதித்யா, மகிமா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். படத்தில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
கள்ளப் பயலே கள்ளப் பயலே..." என்று தொடங்கும் அந்த பாடல், ரமேஷ் விநாயகம் இசையில் உருவாக, ஸ்ரேயா கோஷல் குரலில் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 'மைனா' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களுள் ஒன்றான நீயும் நானும், 'சாட்டை' படத்தில் இடம்பெற்ற 'சகாயனே' பாடல் உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவர்தான் இந்த ஸ்ரேயா கோஷலல்.
Comments
Post a Comment