டோட்டல் இந்திய நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி நம்பர்-ஒன் பிகினி நடிகையான நயன்தாரா!!!

23rd of August 2013
சென்னை::சமீபத்தில் பிரபல இணையதளம் ஒன்று இந்திய அளவில் பிகினியில் எந்த நடிகை சூப்பராக இருப்பார் என்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் பாலிவுட் நடிகைகளான கைத்ரினா கைப், தீபிகா படுகோனே, இலியானா, அனுஷ்கா, நீதுசந்திரா, ஸ்ருதிஹாசன், ப்ரியாமணி, நயன்தாரா உள்பட 17 இந்திய பிரபல நடிகைகளின் பெயர்கள் இடம்பெற்றன.

இதையடுத்து ரசிகர்களிடம் இதற்கான வாக்கெடுப்பு நடந்தது. பின்னர் எந்தெந்த நடிகைக்கு எத்தனை வாக்குகள் கிடைத்திருக்கிறது என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, இந்திய அளவில் பிகினி உடை அணிந்தால் நயன்தாராவே சூப்பராக இருப்பார் என்று 23 சதவிகித ரசிகர்கள் வாக்களித்தார்களாம். அதற்கு பில்லா படத்தை உதாரணத்துக்கு எடுத்து வைத்துள்ளனர்.

அதையடுத்து, அனுஷ்காவுக்கு 21 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது. அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை தீபிகா படுகோனேயும், நான்காவது இடத்தை ப்ரியாமணியும், 5வது இடத்தை ஸ்ருதிஹாசனும், 6வது இடத்தை நமீதாவும் பிடித்துள்ளனர்.

ஆக, இந்த கருத்துக்கணிப்பு சேதி நயன்தாராவின் காதுகளை எட்டியபோது, பில்லா படத்தில் பிகினி உடையில் நான் அத்தனை அழகாகவா இருந்தேன் என்று தனது திரையுலக நண்பர்களிடம் கேட்டு புளகாங்கிதமடைந்து வருகிறாராம். மேலும், சரியான கதைகள் அமையும்போது மீண்டும் பிகினி உடையில் நடித்து எனது அபிமான ரசிகர்களை சந்தோசப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.

Comments