29th of August 2013
சென்னை::தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். ரிலீஸுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது.
பொதுவாகவே விஜய் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை யூனிஃபார்முடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர்.
கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். 15 வயது சிறுமியான ஜூனியர் நடிகை ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி ஒருவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட... அந்த பெண் கூச்சல் போட்டதையடுத்து அந்த செக்யூரிட்டியை வளைத்துப் பிடித்தனர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள்.
ஒரே கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே ரணகளப்பட... அந்த சிறுமியின் உறவினர்கள் போலிஸில் புகார் கொடுக்கப்போவதாக சொல்ல ‘பிரச்சனையையை பெருசுபடுத்தாதீங்க’ என ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் சமாதானப்படுத்தியதோடு, நடந்த பிரச்சனைக்கு பிராயச்சித்தமாக ஒரு தொகையையும் கொடுத்திருக்கிறார்.
ஆனாலும் பிரச்சனை ஓயாமல் இருந்துவர... ஜில்லா படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தினசரி கவனித்து வரும் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்த பிரச்சனையில் தலையிட்டிருக்கிறார்.(ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர்குட்’ நிறுவனம் தான் ஜில்லா திரைப்படத்தை தயாரிக்கிறது)
நடந்த பிரச்சனையை கேட்டறிந்த ‘ஜித்தன்’ ரமேஷ், அந்த செக்யூரிட்டியை ஜில்லா படப்பிடிப்பிற்கு வரக்கூடாது என்று கூறியதோடு, அந்த சிறுமியையும் இனி படப்பிடிப்புக்கு நடிக்க வரவேண்டாம் என்று கூறிவிட்டதோடு இனி நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
வெளியேறிய அந்த சிறுமியின் உறவினர்கள் அந்த செக்யூரிட்டியின் டூவீலரை எடுத்துக்கொண்டு ‘பிரச்சனைக்கு முடிவு கிடைச்சதும் வண்டியை வாங்கிக்கோ’ எனச் சொல்லிவிட்டு போய்விட்டார்கள். ஜில்லா திரைப்படத்தில் விஜய் போலிஸ் கதாபாத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment