'பரஞ்சோதி' படத்திற்காக புதிய பரிமாணம் எடுத்திருக்கும் கஞ்சா கருப்பு!!!

22nd of August 2013
சென்னை::ஐ.பி.எல். சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் 'பரஞ்சோதி'. புதுமுக இயக்குநர் கோபு பாலாஜி, இயக்கும் இப்படத்தின் கதை, காதலிப்பது தப்பா? மனித சமுதாயம் காதலை கெளரவப்படுத்தாமல் கலவரப்படுத்துகிறதே ஏன்? என்ற கேள்விகளை முவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

காதலர்களின் படமாகவும், காதலர்களை எதிர்ப்பவர்களுக்கு பாடமாகவும் உருவாகும் 'பரஞ்சோதி' படத்தில் ஹீரோவாக சாரதி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர் ஆவார். இவருக்கு ஜோடியாக அன்சிபா நடிக்கிறார்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். படம் முழுவதும் வரும் கஞ்சா கருப்பு, இப்படத்தில் ஹீரோவின் தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொண்ணுமணி படத்தில் கார்த்திக்குக்கு சிவக்குமார் எப்படி பாசமிக்க தாய்மமனாக நடித்தாரோ, அதே போல இந்த படத்திலும் ஹீரோ சாரதிக்கு, பாசமிக்க தாய்மாமனாக கஞ்சா கருப்பு நடித்துள்ளார். இதுவரை காமெடி நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் அறியப்பட்ட கஞ்சா கருப்பு, இந்த படத்தில் ரசிகர்களின் மனதை நெகிழ வைக்கும் அளவுக்கு பாசத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கஞ்சா கருப்பு, தனது கதாபாத்திரத்தின் பலத்தை உணர்ந்து, இயக்குநர் கோபு பாலாஜிக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார். கஞ்சா கருப்பு தயாரிக்கும் 'வேல்முருகன் போர்வெல்ஸ்' படத்தின் தேதிகளைக் கூட, 'பரஞ்சோதி படத்திற்கு விட்டுக்கொடுத்து நடித்து வருகிறார். அந்த அளவுக்கு கஞ்சா கருப்பை, வேறு ஒரு பரிணாமத்தில் காட்டக்கூடிய அளவுக்கு காமெடி மட்டும் அல்லாமல், அவருடைய சினிமா வாழ்க்கையில் நிலைத்திருக்கும் ஒரு கதாபாத்திரமாகவும் இந்த தாய்மாமன் வேடம் அமைந்துள்ளது. அதேபோல இயக்குநர் கோபு பாலாஜியின், ஈடுபாட்டையும், அவர் வேலை வாங்கும் விதத்தையும் பற்றி பலரிடம் வெகுவாக பாராட்டி வரும் கஞ்சா கருப்பு, கோபு பாலாஜியின் அடுத்தப் படத்தில் தானாகவே முன்வந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதுமட்டும் இன்றி பரஞ்ஜோதி படத்தில் இடம்பெறும் சேற்றில், ஆற்றில் விழுவது போன்ற காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் கஞ்சா கருப்புவே

புதுமுகம் சாரதி - கஞ்சா கருப்பு காமினேஷன் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட ஹீரோ சாரதி, கஞ்சா கருப்பை மாமா என்று தான் அழைக்கிறார். அந்த அளவுக்கு இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். கஞ்சா கருப்பும், 'பரஞ்சோதி படத்தின் இயக்குநர் கோபு பாலாஜி, ஹீரோ சாரதி உள்ளிட்டவர்களிடம், ஒரு நடிகராக மட்டும் இன்றி ஒரு உறவுக்காரரைப் போல பழகிவருவதோடு மட்டும் அல்லாமல், இப்படத்திற்காக கஞ்சா கருப்பு கால்ஷீட் கொடுத்த நாட்களை விட அதிகமான தேதிகள் கொடுத்து நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்குகிறார். சபேஷ் - முரளி இசையமைக்கின்றனர். எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்ய, சுதாகர் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்பீடு சையத் சண்டைப் பயிற்சியளிக்க, வினோத் கலையை நிர்மாணிக்கிறார். ஏ.ஆர்.சந்திரமோகன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். என்.கோபாலகிருஷ்ணன், என்.தமிழ்ச்செல்வன், என்.மணிகண்டன் ஆகிய மூவரின் இணைத் தயாரிப்பில் 'பரஞ்சோதி படத்தை என்.லட்சுமணன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரியலாக விழுந்து நடித்துள்ளார். அந்த அளவுக்கு இந்த தாய்மாமன் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் நடித்து வருகிறார்.

Comments