21st of August 2013
சென்னை::01. "நான் கடவுள்க்கு பின், எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லையே?
நான் கடவுள் தமிழில், நான் நடித்ததில் முக்கியமான படம். அதனால், அதன் பின், அதுபோன்ற வித்தியாசமான கதை களாக நடிக்க விரும்பி காத்திருந்தேன். ஆனால், அந்த மாதிரி கதைகளே கிடைக்கவில்லை. அதனால் தான், இடைபட்ட காலத்தில் சிங்கள படங்களில் நடித்து வந்தேன்.
02. "பரதேசி படத்தில் நடிக்க அழைத்தபோது நீங்கள் மறுத்து விட்டது ஏன்?
"நான் கடவுள் படத்தில், கண் தெரியாத பெண்வேடத்தை கொடுத்து, என்னை சிறப்பாக நடிக்க வைத்தவர் டைரக்டர் பாலா. அதனால், மீண்டும், "பரதேசியில் நடிக்கக்கேட்டபோது, ரொம்ப சந்தோஷப் பட்டேன்.ஆனால், அவர் கால்ஷீட் கேட்ட அதேதேதியில்,வேறொரு படத்திற்கும் கால்ஷீட் கொடுத்திருந்ததால், நடிக்க முடியாமல்போய் விட்டது.
0
3.உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதுன்னு செய்தி கூட வந்ததே?
அய்யய்யோ, இது வேறயா? நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. உண்மை என்ன என்பது, கடவுளுக்கு தான் தெரியும். நான், திருமணம் முடித்தால், ரகசியமாக முடிக்க மாட்டேன். யார் தான் இப்படி எல்லாம் வதந்தியை பரப்பி விடுகின்றனர் என, தெரியவில்லை.
04.தொடர்ந்து படங்களில் நடிப்பீங்களா?
என்ன பாஸ், இப்படி கேட்டுட்டீங்க. எனக்கு நடிப்பு மீது, ரொம்ப பிரியம் உண்டு. யாராவது ஒரு இயக்குனர், நல்ல கதையோடு வந்து, இதற்கு பூஜா தான் நடிக்க வேண்டும் என, வற்புறுத்தினால், அடுத்த நிமிஷமே, மேக்அப்புடன், ரெடியாகி விடுவேன்.
05. நீங்க, ரொம்ப பேசுவீங்களே, இப்ப குறைச்சிருக்கீங்களா?
எப்பவுமே, எதையாவது உளறி கொட்டி கொண்டு இருப்பது, என்னோட கேரக்டர். அம்மா, நிறைய முறை, இதுபற்றி அட்வைஸ் பண்ணிருக்காங்க. பேச்சை குறை, அதிகமா பேசினால் ஆபத்துன்னு அடிக்கடி சொல்லி இருக்காங்க. ஆனால், என்னை மாத்த முடியவில்லை.
06. நீங்க யாரையோ காதலிக்கிறீங்களாமே?
அப்படியா,எனக்கு தெரியலையே.எனக்கு, காதலில் ஆர்வம் உண்டு. எனக்கு வாழ்க்கை துணையாக வருபவர், நம்பிக்கை துரோகம் செய்கிறவராக இல்லாமல், நல்ல குணம் படைத்தவரா இருக்க வேண்டும். அப்படி ஒருத்தர் அமைஞ்சா கண்டிப்பாக காதலிக்கலாம். ஆனால், இன்னும், அப்படிப்பட்ட ஒரு நபர் கிடைக்கவில்லையே.
Comments
Post a Comment