31st of August 2013
சென்னை::திரிஷாவுக்கு சிமா விருது வழங்கப்பட உள்ளது. தென்னிந்திய சர்வதேச சினிமா விருது(சிமா - SIIMA) வழங்கும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதி ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண்டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் திரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திரிஷாவின் 10 ஆண்டுகள் கலைச் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிமா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் நேரில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொள்கிறார் திரிஷா. இதை மிகவும் உயர்ந்த கௌரவமாக கருதுகிறேன் என்றும் தனக்கு ஆதரவாக இருக்கும் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரிஷா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment