மனோஜ் குமாரின் இயக்கத்தில் உருவாகும் உயிருக்கு உயிராக!!!

23rd of August 2013
சென்னை::இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக படம் வெளிவரவுள்ளது. வேந்தர் புரொக்ஷன்ஸ் வழங்கும் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி இப்படத்தை தயாரிக்கிறது.
 
இப்படத்தில் சஞ்சீவ், சரண்குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் நந்தனா, ப்ரீத்திதாஸ், ஸ்ரீரஞ்சனி, ராஜ்கபூர், மெரினா சதீஷ், பாய்ஸ் ராஜான் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய வேடத்தில் பிரபு வருகிறார். படத்திற்கு ஷாந்த்குமார் இசையமைக்கிறார்.
 
ஒளிப்பதிவு ஆனந்தகுமார். படத்தொகுப்பு க.முத்துகுமார், சினேகன், நந்தலாலா, இயக்குனர் விஜய மனோஜ்குமார் ஆகியோ பாடல்களை எழுதியுள்ளனர். ஏ.ஆர். ரங்க பாஷ்யம் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Comments