உடல் எடை கூட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதால் வருத்தம் அடைந்தார் பூனம் கவுர்!!!

15th of August 2013
சென்னை::உடல் எடை கூட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதால் வருத்தம் அடைந்தார் பூனம் கவுர்.இதுபற்றி பூனம் கவுர் கூறியது:
ஷாம் ஹீரோவாக நடிக்கும் ‘6 படத்தில் இரண்டுவிதமான தோற்றம் ஏற்கிறேன். ஒரு பகுதி படத்தில் இளமை தோற்றத்தில் நடிக்கிறேன். பிற்பகுதியில் சற்று முதிர்ச்சியான தோற்றம் ஏற்கிறேன். முதிர்ச்சியான தோற்றத்துக்கு என்னை கூடுதல் எடை போட வேண்டும் என்று இயக்குனர் துரை கூறினார். முதலில் நான் தயங்கினேன். உங்கள் படத்துக்கு உடல் எடை அதிகரித்துக்கொண்டு நடித்தால் மற்ற படங்களின் கதாபாத்திரம் பாதிக்கும் என்றேன்.

ஆனால் கதைபடி கூடுதல் எடை போடுவது வேடத்துக்கு முக்கிய தேவைதான் அதேசமயம் ஹீரோயின் சற்று குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி சில நடிகைகளின் போட்டோக்களை காட்டினார். அதை ஏற்றுக்கொண்டு வெயிட் போட ஒப்புக்கொண்டேன். அதன்படி தினமும் ஃபேட் நிறைந்த உணவை சேர்த்து சாப்பிட்டு கூடுதல் வெயிட் போட்டேன். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது 51 கிலோ இருந்த நான் ஷூட்டிங் முடிவடையும்போது 57 கிலோவாகிவிட்டேன்.இவ்வாறு பூனம் கவுர் கூறினார்.

Comments