'நீ நல்லா வருவடா' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகிறார் நஸ்ரியா நசீம்!!!

20th of August 2013
சென்னை::ஜீவா அடுத்ததாக 'நீ நல்லா வருவடா' என்கிற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தெலுங்குப் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சந்திரமோகன் இயக்குகிறார்.
 
படத்தை ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌதிரி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் தயாராகிறது. மேலும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார்.
 
தற்போது அவர், தனுஷுடன் நையாண்டி, ஜெய்யுடன் ’திருமணம் எனும் நிக்கா’, ஆர்யா-நயன்தாராவின் 'ராஜா ராணி' என மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார்.
 
இதில் ராஜா ராணி மற்றும் திருமணம் எனும் நிக்கா படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. ஜீவா நடித்த 'சிவா மனசுல சக்தி' படத்தில் வரும் வசனம் தான் இந்த 'நீ நல்லா வருவடா'.

Comments