12th of August 2013
சென்னை::நடிகர் ஆர்யா, மறைந்த இயக்குனர் ஜீவாவால் ‘உள்ளம் கேட்குமே’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட ஆர்யா, தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர். தமிழ் தவிர ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஆர்யா, தனது தாய்மொழியான மலையாளத்தில் ‘உருமி’ என்ற ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் துபாயில் நடந்த சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஆர்யா, ஒரு பிரபல மலையாள டிவிக்கு அளித்த பேட்டியில், ’’உருமி’ படத்திற்குப் பிறகு நிறைய மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் மலையாளத்தில் நடிக்க முடியவில்லை.
நல்ல கதை, நல்ல இயக்குனர் அமைந்து, என்னோட கால்ஷீட்ஸும் ஒத்து வந்தால் மலையாள படங்களிலும் நடிப்பேன். தமிழை பொறுத்தவரை பாலா போன்ற பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னொட அதிர்ஷ்டம்’’ என்று கூறி, தனது தாய்மொழி பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Comments
Post a Comment