15th of August 2013
சென்னை::தலைவா' படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்தார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை::தலைவா' படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்தார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் விஜய் விடியோ பதிவில் புதன்கிழமை பேசியது: சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் "தலைவா' படம் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் படம் வெளியானால் பிரச்னை வரும் எனக் கருதியதால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதைக் கேட்டு படக்குழுவினர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும், விரைவில் சந்தித்துப் பேசுவோம் என நம்புகிறோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, முதல்வர் ஜெயலலிதா உழைத்து வருகிறார்.
அதேபோல் "தலைவா' பட விவகாரத்திலும் தலையிட்டு படம் வெளியாக உதவி செய்வார். கடைசி நேரத்தில் கேரளம், ஆந்திரம் ஆகிய வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் படம் வெளியாவதைத் தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் திருட்டு சி.டி. புழக்கத்தில் உள்ளது. இதை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது. பெரும் உழைப்பில் "தலைவா' படம் உருவாகி இருக்கிறது. சில ரூபாயில் திருட்டு சி.டி. வெளியாவது சட்டப்படி குற்றமாகும். இது தர்மத்தின்படியும் தவறாகும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் திருட்டு சி.டி., விற்றவர்களை ரசிகர்கள் பிடித்துள்ளனர். திருட்டு சி.டி.யைத் தடுப்பதற்கு உதவி புரிந்த காவல்துறையினருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். "தலைவா' படம் எல்லோரும் ரசிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. ஓரிரு நாளில் படம் வெளியாகும். இவ்வாறு விஜய் பேசினார்.
Comments
Post a Comment