11th of August 2013
சென்னை::சென்னை சினிமாஸ் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் ‘சொல்லாமலே’ சசி இயக்கத்தில் பரத், எரிக்கா பெர்னாண்டஸ், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘555’ திரைப்படம் நாளை 10ம் தேதி வெளி வருகிறது.
முதலில் இந்த படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். ரம்ஜான் மற்றும் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு இப்போது 5 நாள் முன்னாடியே படத்தை வெளி
யிட முடிவு செய்துள்ளார்கள்.
இப்படத்தின் பாடல்கள் ஏற்கென ஹிட்டாகி பேசப்பட்டு வருகிறது. படத்தின் ஹீரோ பரத்தும் ‘சிக்ஸ் பேக்’ உடலமைப்பில் ஆச்சரியப்படும்படி நடித்திருப்பதாலும் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment