12th of August 2013
சென்னை::சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 54வது படத்திற்கு வீரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பம் படத்திற்கு பிறகு நடிகர் அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், சந்தானம், முனிஷ், ரமேஷ் கண்ணா, அப்புக்குட்டி, நாடோடிகள் அபிநயா, இளவரசு, மயில்சாமி, பெரியார்தாசன், தேவதர்ஷினி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அஜீத்திற்கு ஆங்கில எழுத்தான V மிகவும் அதிர்ஷ்டமான எழுத்து என்பதால், வரலாறு, வாலி மற்றும் வில்லனைத் தொடர்ந்து இப்பெயரை சூட்டியுள்ளனர்.
பொங்கல் பரிசாக அஜீத் ரசிகர்களுக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் டீசர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment